Tuesday, June 29, 2010

வால்பாறை - வார விடுமுறை செல்ல ஒரு சிறந்த இடம்

இந்த மாதம் முதல் வாரத்தில் எங்க வீட்டுகார அம்மாவுக்கு கோயம்புத்தூர் செல்ல வேண்டிய வேலை இருந்தது. நாம வெட்டியா ஏன் ஹோட்டல்ல இருக்கறதுனு சொல்லி எங்க போகலாம்னு யோசிச்சபோது 'வால்பாறை'னு முடிவு பண்ணியாச்சு.

காலைல ஒரு 9.30 மணி வாக்கில் கார் எடுத்து கெளம்பியாச்சு. நம்ம ஊரு சென்னை ஒப்பீடு பண்ணும் போது கோயம்புத்தூர்ல அப்படி ஒன்னும் டிராபிக் இல்ல அதனால சீக்கிரமா நகரத்தை தாண்டி வேகமா முன்னேறி போய்ட்டு இருந்தேன். சாலையின் இருபுறமும் அழகான குல்மோகர் மரங்கள், அழகான கிராமங்கள் என்று கார் பயணம் ரொம்ப அருமையாக இருந்தது.



இப்படி ஒரு 25 கி.மீ. பயணம் பண்ணிய பிறகு ஆழியார் அணை வந்து சேர்ந்தாச்சு. என் பயணம் வால்பாறை நோக்கி என்பதால் நிறைய நேரம் செலவு செய்ய வில்லை.. வரும்போது பார்த்து கொள்ளலாம் என்று அங்கிருந்து கிளம்பியாச்சு. இந்த இடம் வால்பாறை அடி வாரத்தில் இருக்கிறது.. கொஞ்சம் தள்ளி போனால் மலை பதை ஆரம்பமாகிறது..



ஆழியார் அணை - மலை பாதை ஆரம்பத்தில்


வளைந்து நெளிந்து செல்லும் மலை பாதை





மலை பாதை ஆரம்பத்தில் 'குரங்கு அருவி' இருக்கின்றது ஆனால் போதிய நீர் வரத்து இல்லாததனால் அங்கு செல்ல தடை விதிக்க பட்டுள்ளது.

இங்கே தான் 'குரங்கு அருவி' செல்லும் வழி உள்ளது



இப்படி இயற்கையை ரசித்த படியே மேலே சென்றோமானால் நம்மை வரவேற்பது பச்சை ஆடை போர்த்திய தேயிலை தோட்டங்கள். ஒவ்வொரு சாலை திருப்பத்திலும் ஒவ்வொரு விதமான அழகு.





ஒரு வழியாக வால்பாறை வந்தாச்சு.. இப்போ என்ன பண்றதுன்னு தெரியல, சரி இன்னும் கொஞ்சம் மேல போய் பார்க்கலாம் நு கெளம்பியாச்சு..என்ன இருக்குனு விசாரிச்சதுல 'நீரார் அணை' இருக்குனு சொன்னங்க.. சரி அங்க போவோம்னு மேல பயணப்பட்டேன். வால்பாறை கொஞ்சம் தண்டின உடனே 'கூழங்கள் ஆறு' என்று மிக அழகான ஒரு ஆறு ஓடிகிட்டு இருந்தது.



மேற்கொண்டு பயணம், வழியில் மிக கொஞ்சமே மனித நடமாட்டம்.. வழி கேக்க கூட யாரும் இல்ல. இப்படி போயிடு இருக்கும் போது திடீர்னு 'மேல் நீரார் அணை' வந்தாச்சு. அப்போ தான் தெரிஞ்சுது வழி தவறி ரொம்ப தூரம் மேல வந்துட்டேன்னு.. சரி புகைப்படம் ஆவது எடுக்கலாம்னு கொஞ்சம் எடுத்துட்டு கிளம்பினேன்.. அப்போ வழி கேட்க பக்கத்துல இருந்த ஒருத்தர கேட்டேன். அவரும் வழி சொன்னாரு அப்படியே அவரும் அங்க தான் போறேன்னு சொன்னாரு, உங்க கூடவே வரட்டுமான்னு கேட்டாரு நானும் சரின்னு சொன்னேன். பார்த்த அவர் இன்னும் 2 பேர எங்கிருந்தோ சைகை பண்ணி அழைத்தார். அவங்களும் கார்ல வந்து ஏறிட்டாங்க. எனக்கு ஒரே திகில போச்சு என்னடா எதனா வம்புல மட்டிகிட்டோமனு, சரி ஆகறது ஆகட்டும்னு கெளம்பியாச்சு.

பிறகு அவங்க வழி சொல்ல நான் செல்ல, திடீர்னு ஒரே அடை மழை ஒரு பக்கம் சந்தோஷம் ஒரு பக்கம் திகில், (சந்தோஷம் மழை வந்ததுக்கு - திகில் இப்டி தனியா வந்து மட்டிகிட்டோமேனு), ஆனா நெனச்ச மாதிரி ஒன்னும் இல்லாம 'நீரார் அணை' வந்து சேர்ந்தாச்சு.
ஈரமான சாலை





அடை மழை காரணமாக வெளில செல்ல முடியவில்லை.. அதனால கார் உள்ளே இருந்தே புகைப்படம் எடுத்துட்டு கெளம்பிட்டேன். ஆனா திரும்பி வரும் போது ஒரே டெரர் தான், பேய் மழை சாலை இரு பக்கங்களிருந்தும் தண்ணீர் அருவி மாதிரி கொட்டுது, சாலை தெரியல - கார் ஏதோ தண்ணீர்ல மெதகர மாதிரி தான்.. ஒரு வழியா 'வால்பாறை' வந்து சேர்ந்தாச்சு.


மணி பார்த்தா மதியம் 2, பசி வயித்த கிள்ளிச்சி, ஒரு செட்டிநாடு ஹோட்டல் இருந்தது, போய் சாப்பாட்ட ஒரு புடி புடிச்சுட்டு அங்க இருந்து கோயம்புத்தூர் கெளம்பியாச்சு.



ஆணை மலை



வரும் வழியில் 'ஆழியார் அணை' பார்க்கலாம்னு கொஞ்சம் மேல போனபோது இந்த பார்வை கிடைத்தது




1. நீரார் அணை
2. அதிரம்பள்ளி அருவி (20 கி.மீ) (புன்னகை மன்னன் அருவி)
3. பூஞ்சோலை
4. ஆனைமுடி சிகரம்
5. பாலாஜி கோவில்

8 comments:

  1. வால்பாறையில் ஒரு மலைப்பகுதியிலிருந்து பார்த்தால் எதிர் மலையில் ஏழு அருவிகள் கொட்டும் இடம் ஒன்று உண்டு. ஹை-பாரஸ்ட் போகும் வழி. இடம் பேரு ரொம்ப நாள் நினைவு வைச்சி இருந்தேன். ரொம்ப ரம்யாமா இருக்கும் பார்க்க.

    ReplyDelete
  2. மிக அழகான இடம். கல்லூரியில் படிக்கும்போதே சக மாணவர்களுடன் சென்ற ஒரு இடம். அழகான நினைவுகளை திரும்பிப் பார்க்க வைத்தது உங்கள் பதிவு. வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  3. வாங்க வாங்க.. இப்படி எழுதினால் இல்லை ஆச்சு.. அழகான இடங்கள்.. நாங்கள் வருடா வருடம் போகும் இடமாக்கும்.. அழகா அதை படமெடுத்ததற்கு நன்றி.

    ReplyDelete
  4. புகைப்படங்கள் ரொம்ப அழகா இருந்தது. ஆழியார் அணை, குரங்கு நீர்வீழ்ச்சி போயிருக்கேன் .வால்பாறை போய் பார்க்கும் ஆவலைத் தூண்டியது.

    ReplyDelete
  5. naanga 06,10,2012 annaikku polamnu irukkom, poyittu vanthu, engal anubavathai solkirom. nantri

    ReplyDelete
  6. naanga 06,10,2012 annaikku polamnu irukkom, poyittu vanthu, engal anubavathai solkirom. nantri

    ReplyDelete